Saturday, May 16, 2015


பத்து வருடங்களாகியும் இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தெலுங்கு படங்களுக்கு திடீர் பிரேக் விட்டுவிட்டு தமிழுக்கு வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இங்கு அவர் மனசுக்கு ஏற்றார் போல நாலைந்து படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நேரத்தில் அவரை தெலுங்கு படவுலகத்திலிருந்து அழைக்காத பெரிய ஹீரோக்களே இல்லையாம்.

எல்லாருக்கும் நான் இப்ப வர முடியாது ப்ளீஸ் என்றே கூறிவந்தாராம், நயன்தாரா. மறுபடியும் என்ன நினைத்தாரோ? திடீரென தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பிய நயன், வெகு காலம் கழித்து பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

அதிஷ்டசாலிடா என்று மற்றவர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழில் தனது படங்களை குறைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறாராம், நயன்தாரா. இனி பாலகிருஷ்ணா படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களுடன் மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்துவிட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் தமிழை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment