சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாஸன்
சூர்யா - ஹரி இணையும் சிங்கம் 3 படத்தில், நாயகியாக ஸ்ருதிஹாஸன் ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் கேரியரில் சிங்கம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய ஹரியே, அடுத்து சூர்யாவை வைத்து சிங்கம் 2 எனப் படமெடுத்தார். அந்தப் படம் சிங்கம் படத்தைவிட மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது சூர்யாவே எதிர்ப்பார்க்காத வெற்றி.
இப்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார். இந்த படத்திலும் சூர்யா-அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளாராம்.
சிங்கம் 2-ம் பாகத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவர் கொல்லப்பட்டுவிட்டார்.
இந்த மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூரியும் இந்தப் படத்தில் பிரதான காமெடியனாக வருகிறார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் இரு பாகங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
ஸ்ருதிஹாசன் ஏற்கெனவே சூர்யாவுடன் 7-ஆம் அறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல், ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பூஜை' படத்திலும் நடித்திருந்தார். செப்டம்பர் மாதத்தில் ‘சிங்கம்-3' படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment