Thursday, May 14, 2015


அதிக அளவு உடல் உறவு கொள்பவர்கள் அதிகம் சம்பாதிப்பார்கள் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுக்கு எல்லாம் கூடவா ஆய்வு செய்வார்கள் என்று நீங்கள் நினைத்தால். ஆமாம் என்பது தான் பதில். இங்கிலாந்தில் உள்ள ஆங்க்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டாக்டர் நிக் ட்ரைதகிஸ் என்பவர் தான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

அவர் 7 ஆயிரத்து 500 கிரேக்கர்களிடம் அவர்களின் வேலை மற்றும் செக்ஸ் வாழ்க்கை பற்றி கேள்விகள் கேட்டார். ஆய்வின் முடிவில் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும் அதிகம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு உள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். 26 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கும், உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கும் இந்த ஆய்வு முடிவு மிகவும் பொருந்துமாம். இது குறித்து டாக்டர் நிக் கூறுகையில், உடல் நலம், வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவைக்கு செக்ஸுக்கும் தொடர்பு உள்ளது. உடல் நலம், மகிழ்ச்சி இல்லாவிட்டால் தனிமையாக உணவர்வதுடன், விரக்தி, கோபம் ஏற்பட்டு அது அலுவலக பணியை பாதிக்கும் என்றார்.

0 comments:

Post a Comment