Wednesday, May 13, 2015

கைதட்டல் வாங்கும் டயலாக்!

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரு டீல், வில்லனுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு டீல், ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் ஒரு டீல். இந்த டீலில் யார்  ஜெயிக்கிறார்கள் என்பதுதான் ‘வா’ படத்தின் நாட் என்கிறார் இயக்குனர் ரத்தினசிவா. இவர் ‘ரேனிகுண்டா’ பன்னீர்செல்வத்திடம் சினிமா கற்றவர்.அருண்விஜய் எப்படியிருக்கிறார்?

பொதுவாக அருண் விஜய் தன்னுடைய படங்களில் அதிகமாக மெனக்கெடுவார். ஆனால் இதில் லைட் வெயிட் கேரக்டர் என்பதால் யதார்த்தத்துக்கு  பக்கத்தில் இருப்பார். ‘தடையற தாக்க’ படத்துல டார்க் லுக்கிலும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாகவும் வந்த அவருக்கு இதில் ஃப்ரெஷ் லுக்  கொடுத்திருக்கிறேன். கார்த்திகா?

வழக்கமாக ஹீரோயின் வரும்போது பாட்டோடுதான் வருவார். இதில் ஃபைட்டோடு வர்றார். அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் கைதட்டல்  வாங்கும். அந்தளவுக்கு டயலாக் பொறி பறக்கும். வில்லனாக டான்ஸ் மாஸ்டர் கல்யாண் வர்றார். குத்துப்பாட்டுக்கு மட்டும் வந்து போகும் சுஜா  வாருணிக்கு பிரமாதமான கேரக்டர் ரோல். இந்தப் படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்கும்.  இவர்களோடு ஜெயபிரகாஷ், சதீஷ், வம்சி,ரேணுகா  ஆகியோரும் இருக்கிறார்கள். இசை?

இப்போதுள்ள யூத் ஆடியன்சுக்கு தமன் மிகப் பெரிய சாய்ஸ். ரீ-ரிக்கார்டிங்கில் பின்னியெடுத்திருக்கிறார். ‘என்னமோ நடக்குது’ கோபி ஜெகதீஸ்வரன்  கலர்ஃபுல்லாக படமாக்கியிருக்கிறார்.

0 comments:

Post a Comment