Wednesday, May 13, 2015

ரஜினி பட டிஸ்கஷனுக்காக ரூ. 3 லட்சம் வாடகை வீடு

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ரஞ்சித் இயக்க உள்ளார் என்று கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். ஆனால் இப்படத்தை பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இப்படத்தின் டிஸ்கஷனுக்காக மூன்றரை லட்சம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து அதில் இயக்குனர் தனது உதவி இயக்குனர்களுடன் காட்சிகள் பற்றி விவாதம் நடத்தி வருகிறார். தாதாவாக இப்படத்தில் ரஜினி நடிக்கிறார். 

ஆனால் அவருக்கு ஜோடி கிடையாதாம். ரஞ்சித்தின் முந்தைய இரு படங்களுக்கும் இசை அமைத்தவர் சந்தோஷ் நாராயணன். அவரே இப்படத்துக்கு இசை அமைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இளையராஜாவை இசை அமைப்பாளராக்க எண்ணியிருப்பதாக தெரிகிறது. ரஜினியை ஆக்‌ஷன் அவதாரமாக பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றபோதும் ஜோடி இல்லாமல் செய்துவிட்டால் ஏமாற்றமாகிவிடும் என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. இதையடுத்து ரஜினியை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து அதில் ஒருவருக்கு ஜோடி வைத்தால்தான் கமர்ஷியலாக ஒர்க்அவுட் ஆகும் என்று வேறு சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment