ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் சீரிஸ் ‘மேட் மேக்ஸ்’ படத்தின் 4ம் பாகம் வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் இதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. இந்த பாகத்தை ஜார்ஜ் மில்லர் இயக்கியுள்ளார். முழுக்க நமீபியாவில் இதுவரை பார்த்திராத லொகேஷன்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜ் மில்லர் கூறுகிறார். பிரிட்டிஷ் நடிகர் டாம் ஹார்டி இதில் மேட் மேக்ஸாக நடித்துள்ளார். சார்லிஸ் தெரான் முக்கிய வேடம் ஏற்கிறார். வார்னர் பிரதர்சின் வெளியீடான இப்படம் மற்ற பாகங்களின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இதில் புது கதை சொல்லப்பட்டுள்ளதாகவும் பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment