Monday, May 4, 2015

nayanthara

சிம்பு, பிரபு தேவா என இரு நடிகர்களுடன் காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கி முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்பு, நயன்தாரா இருவரும் காதல் வலையில் விழுந்தனர். ஆனால் சில மாதங்களில் காதல் போய் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்த நயன்தாரா,  பிரபு தேவாவுடன் காதல் கொண்டார். பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறித்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவாவும் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் நயன்தாரா, பிரபு தேவாவை கழட்டி விட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவரிடம் கடந்த கால காதல் மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு நயன்தாரா, நானும் சாதாரணமான பெண்தான். சராசரி மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உணர்ச்சிகளும் எனக்கும் இருக்கிறது. எனக்கும் ஆசைகள் இருக்கிறது. கோபமும் வரும் என்று பதிலளித்துள்ளார்.

0 comments:

Post a Comment