Monday, May 4, 2015

ரஜினி - ரஞ்சித் பட செய்தியை மறுத்த PRO - குழப்பத்தில் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் - Cineulagam
ரஜினி ரசிகர்களுக்கு நேற்றைய தினம் கொண்டாட்டமான நாள். தங்கள் தலைவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஒரு பிரபல மக்கள் தொடர்பாளர் (PRO) மூலம் கிடைத்துள்ளது.
இதில் விஷேசம் என்னவென்றால் வெறும் இரண்டு படங்களை மட்டுமே எடுத்த இளம் இயக்குனர் மெட்ராஸ் பட புகழ் ரஞ்சித் ரஜினியை இயக்க போகிறார் என்ற செய்தி .
ஆனால் இந்த செய்தியை ரஜினியின் ஆஸ்தான மக்கள் தொடர்பாளர் இன்று மறுத்துள்ளார். ”ரஜினி படத்தின் இயக்குனர் தேடல் இன்னும் போய் கொண்டிருக்கிறது யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் .
எதை நம்புவது எதை மறுப்பது என்று புரியாமல் தவிக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

0 comments:

Post a Comment