ஜாலியான கமர்ஷியல் படங்ளில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் - விமல்
விமல் நடித்து வந்த நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படம் தற்போது காவல் என்று பெயர் மாற்றபட்டிருக்கிறது. விமல், சமுத்திரகனி முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம்.
அதோடு, இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனியின் நடிப்பும், அந்த படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட ரிஸ்க்கையும் ரொம்பவே பெருமையாக பேசி வருகிறார். அவரிடம் நீங்கள் எப்போது காக்கி சட்டை அணிந்து நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு அவர் பின் வருமாறு கூறியுள்ளார்.
இது பற்றி விமல் பேசியதாவது :
காக்கி சட்டை போட்டு நடிக்கனும்னா ஒரு உடல்கட்டு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் எனக்கு பொருந்தாத வேடத்தில் நடிக்க ஒருபோதும் நான் ஆசைப்படுவதுமில்லை என்கிறார். மேலும் களவாணி, வாகை சூடவா போன்ற கதைகள் தான் எனக்கு செட்டாகும்.
குறிப்பாக காதல், காமெடி, ரொமான்ஸ் இப்படித் தான் என் ரூட் போய்க்கொண்டிருக்கிறது. அது தான் எனக்கு பொருத்தமாகவும் இருக்கிறது. அதனால் நான் இதேபோன்று ஜாலியான கமர்சியல் ரூட்டில் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன், என்று விமல் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment