Wednesday, May 20, 2015

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அஜித்தோடு லட்சுமிமேனன், சூரி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மே 7 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறதாம். இடையில் மே19 ஆம் தேதி மட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். லட்சுமிமேனன் பிறந்தநாள் என்பதால் அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லையோ என்று பார்த்தால், முன்தினம் 18 ஆம் தேதி பகலில் தொடங்கிய படப்பிடிப்பு 19 காலைவரை நடந்ததாம். அதனால், 19 ஆம் தேதி படப்பிடிப்பு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். 

இந்தப்படத்தில் அஜித்தின் வேடம் என்ன தெரியுமா? அவர் டாக்சிடிரைவராக நடிக்கிறாராம். தமிழகத்திலிருந்து கல்கத்தா போய் டாக்சி ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒரு தங்கை என்று கதை போவதால் இது பாட்ஷா படம் போலவே இருப்பதாகப் பேச்சு வந்துவிட்டது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படத்தை எடுப்பதில் மட்டும் கவனமாக இருக்கிறதாம் படக்குழு.

0 comments:

Post a Comment