Sunday, May 3, 2015

டன்டனக்கா பாடல் விவகாரம் - கோர்ட் உத்தரவு - Cineulagam
லக்ஷமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்திருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தில் இடம் பெற்ற டன்டனக்கா பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
டி.இமான் இசையில், அனிருத் பாடியிருந்த இப்பாடலில் டி.ராஜேந்தர் பற்றியும், அவரது புகழ்பெற்ற வசனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே டி.ராஜேந்தர், படத்தில் பல காட்சிகள் என்னை கிண்டல் செய்கிறது, இது எனது புகழுக்கு களங்கம் விளைப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள கோர்ட் உத்தரவில், ரோமியோ ஜுலியட் படத்தை ஒரு வாரத்திற்குள் மனுதாரர் டி. ராஜேந்தருக்கு போட்டுக் காட்ட வேண்டும். படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருந்தால் இரு தரப்பினரும் சமரசமாக பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment