ஆமாம்யா காதலிக்கிறேன், அதுவும் டீப்பா: தமன்னா
தான் காதலில் விழுந்துள்ளதாக நடிகை தமன்னா ஒப்புக் கொண்டுள்ளார். அதுவும் ஆழமான காதலாம். மும்பையில் பிறந்து வளர்ந்த தமன்னா கேடி படம் மூலம் கோலிவுட் வந்தார். கல்லூரி படம் தான் தமிழ் சினிமா ரசிகர்களை அவரை கவனிக்க வைத்தது. இதையடுத்து அவர் தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் படங்களோடு தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.
கோலிவுட், டோலிவுட் போதாது என்று நினைத்த தமன்னா பாலிவுட் சென்றார். ஜகஜால ஜிக்கிகள் பலர் உள்ள பாலிவுட்டில் தமன்னாவால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் முயற்சியை கைவிடவில்லை.
தமன்னாவிடம் பத்திரிக்கையாளர்கள் அடிக்கடி காதல் பற்றி கேள்வி கேட்பது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் எல்லாம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை என்று கூறி வந்தார் தமன்னா.
ஆமாம், நான் காதலிக்கிறேன். அதுவும் ஆழமாக காதலிக்கிறேன். ஆனால் நான் காதலிப்பது ஒரு ஆணை அல்ல என் வேலையை என்று தெரிவித்துள்ளார் தமன்னா. இந்த பதில் பத்திரிக்கையாளர்களுக்காம்.
தமன்னா தற்போது தெலுங்கில் ரவி தேஜாவின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா-கார்த்தி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். எல்லாம் சரியாக நடந்தால் ராம் சரண் தேஜா படத்திலும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
தமன்னா முன்பு ஒரு நடிகரை காதலித்தார். அதன் பிறகு அந்த நடிகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதில் இருந்து தமன்னா சிங்கிளாகத் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment