
தயாரிப்பாளர் வருண் மணியனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர்கள் ராய் லட்சுமி, டாப்சி. திடீரென்று அவர்களுடன் ‘டூ’ விட்ட வருண் மணியன், திரிஷாவுடன் காதலை வரவழைத்துக்கொண்டு, அவரையே திருமணம் செய்ய நிச்சயதார்த்தமும் நடத்தி விட்டார்.
அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும் என்று திரிஷா சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், வருண் மணியன் தயாரிப்பில் திரு இயக்கும் படத்தில், ஜெய் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் திரிஷா.
இதனால் வருண் மணியனுக்கும், திரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் ஏரியாவில் கிசுகிசுக்கிறார்கள். இந்நிலையில், திரிஷா மறுத்த வேடத்தில் டாப்சி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரிஷா பற்றிய வதந்திகளுக்கும், இதற்கும் ஏதோ முடிச்சு இருப்பது போல் தெரிகிறது. டாப்சியிடம் கேட்டால், ‘இதுக்கு முன்னாடி இந்த படத்துல திரிஷா கமிட்டாகி இருந்தார்னு எனக்கு தெரியாது’ என்றார்.
0 comments:
Post a Comment