Tuesday, May 19, 2015

இரண்டெழுத்து கவர்ச்சி நடிகைக்கு படம் இயக்கித் தருவதாக சொல்லி மாஸாக பிரியாணி கிண்டும் இயக்குனர் பணம் வாங்கியிருந்தாராம். ஆனால் படம் இயக்கித் தராமல் டிமிக்கி கொடுத்தார். 

விஷயத்தை படம் தயாரிக்கிறவங்க சங்கத்துக்கு கொண்டு போனார் நடிகை. எல்லோருமாக பஞ்சாயத்து பேசி கவர்ச்சி நடிகைக்கு பணத்தை திருப்பி கொடுத்திடுங்கன்னு தீர்ப்பு சொன்னாங்களாம். ஆனால் அதில் பாதியை தான் தந்தார்களாம். ஆண்கள் எல்லோருமாக சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார்கள். 

பெண் பாவம் அவர்களை சும்மா விடாது” என்று சாபமிட்டுக் கொண்டிருக்கிறாராம் நடிகை. ஒரு காலத்தில் அந்த கிரிக்கெட் டீமோடு பார்ட்டி பங்ஷன்னு காசை வாரி இரைச்சதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்னு தன்னையே நொந்துக்கிறாராம். “எப்படியாவது நடிச்சு சம்பாதிச்சு ஒரு சூப்பர் ஹிட் படம் எடுத்து அவுங்க முகத்துல கரிபூசுறேன் பாருங்க”ன்னு சவால் விட்டிருக்காராம். இப்போதெல்லாம் நடிகை பார்ட்டி பங்ஷன்னு எங்கேயும் வெளியில போறதில்லையாம். எல்லாமே வீட்டுக்குள்ளதானாம்.

0 comments:

Post a Comment