இன்னும் எத்தனை காலத்துக்குதான் பாட்ஷா படத்தை காப்பியடிப்பார்களோ தெரியவில்லை.
முதன் முறையாக அந்த படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு, அப்படியே கரைந்து உலர்ந்து கடைசியில் வெறுப்பாக முடிகிற வரைக்கும் பாட்ஷாவின் கதையை பார்ட் பார்ட்டாக பிரித்து பிளாட் போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.
தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளிலும் கரைத்து கரைத்து குடிக்கப்பட்ட படம் இந்த பாட்ஷா. இப்போது அஜீத் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் அல்லவா? இதிலும் அஜீத்துக்கு கார் டிரைவர் வேஷம். அவருக்கு ஒரு தங்கச்சி. பிளாஷ்பேக்கில் கொல்கத்தா தாதா என்று போகிறதாம் கதை. ‘புதுசா யோசிக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுக்க பயமாயிருக்கே’ என்பார்கள் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் இயக்குனர்கள். இதில் சிவாவும் சேர்ந்து விட்டாரே என்கிற வருத்தம்தான் பலருக்கும்.
ஆனால் சிவா குரூப் என்ன சொல்கிறது? ஊரே சேர்ந்து ஒண்ணு நினைச்சுட்டு இருக்கும். அவரு வேற ரூட்ல போவாரு. அதை பல முறை புரூப் பண்ணியிருக்கார். படம் வரட்டும். பாருங்க என்கிறார்கள். அட… ஆட்டோ டிரைவரை டாக்ஸி டிரைவரா மாத்திட்டாரே, அது கூடவா புரியல?

0 comments:
Post a Comment