Thursday, May 14, 2015


மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் 'த்ரிஷ்யம்'. இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் தமிழ், மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் ஆகி, தற்போது இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. 

'பாபநாசம்' என்ற பெயரில் உருவாகியுள்ள தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன், கவுதமி, கலாபவன் மணி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வெகுவிரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா தேதியும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆகி வரும் இந்த படத்தில் அஜய்தேவ்கான், தபு, ஸ்ரேயா சரண், ராஜாத் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தியில் இந்த படத்தை நிஷிகாந்த் கமத் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பணிகளும் நிறைவடைந்து தற்போது ஜூலை 31 என ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் அஜய்தேவ்கான், நடிகை தபு, இயக்குனர் நிஷிகாந்த் கம்த், ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், எடிட்டர் ஆரிப் சைக்கா, இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ், தயாரிப்பாளர் குமார் மங்கத் பகத் உள்பட பத்து பேர் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment