Thursday, May 14, 2015


தற்போது தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் டிரெண்ட் ஓடிக்கொண்டிருக்கின்றது. பிரபல இயக்குனர்கள் கூட தங்கள் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே கானா பாடல்கள் எழுதுபவர்கள் மற்றும் கானா பாடகர்களுக்கு கோலிவுட்டில் தற்போது நல்ல மவுசு இருந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமியிடம் உதவியாளராக இருந்த தயானந்தன் என்பவர் இயக்கி வரும் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' என்ற படத்தில் இடம்பெறும் ஒரு கானா பாடலை மூன்று கானா பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர். சங்கர்ராம் என்ற புதுமுக இசையமைப்பாளர் கம்போஸ் செய்த இந்த பாடலை அந்தோணி பாக்யராஜ் என்பவர் எழுதியுள்ளார்.

இந்த பாடலின் பல்லவியை கானா பாலாவும், சரணத்தை கானா உலகநாதனும் பாட இந்த பாடலை முடித்துள்ளார் தேவா. ஒரு கானா பாடகர் பாடினாலே, அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில் மூன்று கானா பாடகர்கள் பாடிய இந்த பாடல் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் மூன்று கானா பாடகர்கள் பாடியுள்ளது இதுதான் முதல்முறை

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற இந்த படத்தின் நாயகன், நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment