Thursday, May 14, 2015


தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ரமணா' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் ஆனது. இதன் இந்தி ரீமேக்கான 'கப்பார் இஸ் பேக்' படத்தில் அக்சயகுமார் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர்.
 
கடந்த 1ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே ரூ.4 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கப்பார் ஈஸ் பேக்’ படம் பார்த்தேன். மிகவும் அற்புதமான படம். கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்' என்று கூறியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் தீவிரமாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இந்த படம் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் காட்சிக்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment