ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடித்த 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் இந்த படத்தை யூடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆர்யாவின் இன்னொரு படமான 'யட்சன்' படத்தின் டிரைலர் 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' படத்துடன் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் டிரைலரின் பணிகளை இயக்குனர் விஷ்ணுவர்தன் முடித்துவிட்டபோதிலும், இன்னும் சென்சார் ஆகாததால், புறம்போக்கு படத்துடன் யட்சன் படத்தின் டிரைலர் வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டிரைலர் சென்சார் ஆகி முடிந்த பின்னர் இணையதளத்தில் தனியாக வெளியாகும் என தெரிகிறது. ஆர்யாவின் ரசிகர்களுக்கு நாளை டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது எதிர்பாராதவிதமாக சிங்கிள் ட்ரீட்டாக மாறிவிட்டது.
ஆர்யா,கிருஷ்ணா, தீபா சந்நிதி, ஸ்வாதி, கிஷோர், ஒய்.ஜி.மகேந்திரா, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள யட்சன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யூடிவி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment