Thursday, May 14, 2015

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகும் இந்தப்படத்தில் தமிழில் நாயகனாக சிம்புவும் தெலுங்கில் நாயகனாக நாகசைதன்யாவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

தற்பொழுது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் எடுத்துவிட்டு அப்புறம் தெலுங்கு என்றில்லாமல் தினமும் இரண்டுமொழிகளுக்கும் சேர்த்தே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதனால் தெலுங்கு நாயகன் நாகசைதன்யா சென்னை வந்திருக்கிறாராம். அவருக்குத் தினமும் அரைநாள்தான் படப்பிடிப்பு.
காலையில் அவர் சம்பந்தப்பட்ட தெலுங்குப்படத்தின் காட்சிகளைப் படமாக்குகிறாராம் கௌதம். மதியத்துக்கு மேல் சிம்பு நடிக்கிறாராம். அவர் தூங்கி எழுந்து தயாராகிப் படப்பிடிப்புக்கு வர மதியமாகிவிடும் என்று வழக்கமாகச் சொல்லப்படும். அதனாலேயே அவருக்கு மதியத்துக்கு மேல் படப்பிடிப்பு வைத்துவிட்டார் போலும். சிம்பு வந்ததும், தமிழ்ப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம். 

நாயகியாக நடிக்கும் மஞ்சிமாமோகனுக்குத்தான் ஓய்வில்லை. இரண்டு மொழிகளிலும் அவர்தான் நாயகி என்பதால் முழுநாளும் படப்பிடிப்பில் இருக்கவேண்டும். ஒரு நடிகை முழுநாள் படப்பிடிப்பில் இருப்பதிலொன்றும் சிக்கலில்லை, மலையாளப்பெண்ணான அவர், காலையில் தெலுங்கு பேசுவதுபோல் வாயசைக்கவேண்டும் மாலையில் தமிழ்பேசுவதுபோல வாயசைக்கவேண்டும் என்பதுதான் கஷ்டம்.

0 comments:

Post a Comment