கடந்த 2002ல் சல்மான் கான், மும்பையில் கார் ஓட்டிச் சென்ற போது சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயம் அடைந்தனர். இதனால் மும்பை போலீஸார் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 13 ஆண்டுகளாக நடந்துவரும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
மது அருந்திவிட்டு சல்மான் கான் காரை ஓட்டியது நிரூபணமாகியுள்ளது என்றும், லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டியது உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளது என்றும் கூறியுள்ள நீதிமன்றம், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வழக்கில் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment