இந்திய சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் அரசு தேசிய விருதுகளை கொடுத்து கௌரவித்து வருகிறது. இதில் இந்த வருடம் தமிழில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தொகுப்பாளர் உங்களுக்கு யார் விருது கொடுத்தார்கள் என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் ‘அவர் யார் என்றே தெரியவில்லை, ஆனால், அவரை சுற்றி பல பேர் இருந்தார்கள், ஒரு வேளை பெரிய ஆளாக இருப்பார் என்று நானே நினைத்து கொண்டேன்’ என்று கூறினார். இதை இயக்குனர் மணிகண்டனிடம் விழா நடக்கும் போதே இந்த சிறுவர்கள் கூறியுள்ளனர், சற்று நேரத்தில் இதனால் அந்த இடமே கலகலப்பாகியுள்ளது.
0 comments:
Post a Comment