பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது படத்தின் பிரமாண்டமான காட்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவிற்கு வசனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. தனது முதல் படமான ஜெண்டில்மேன் முதல் சமீபத்தில் ரிலீஸான 'ஐ' படம் வரை பிரபல எழுத்தாளர்கள்தான் அவரது படத்திற்கு வசனம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெண்டில்மேன், காதலன், ஜீன்ஸ் ஆகிய படங்களுக்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரனும், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களுக்கு எழுத்தாளர் சுஜாதாவும் வசனம் எழுதினர்.
சுஜாதாவின் மறைவிற்கு பின்னர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்திற்கு மதன்கார்க்கியும், 'ஐ' படத்திற்கு சுபாவும் வசனம் எழுதினர். ஆனால் பாலகுமாரன், சுஜாதா வசனங்கள் ஏற்படுத்திய பரபரப்பை இந்த இரண்டு படங்களும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் ஷங்கர் தனது அடுத்த படமான எந்திரன் 2' படத்திற்கு வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற பெயர் பெற்ற ஜெயமோகன், ஏற்கனவே வசந்த பாலனின் 'அங்காடி தெரு, பாலாவின் நான் கடவுள்' மற்றும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment