Wednesday, May 20, 2015


36 வயதினிலே படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஜோதிகா தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த போதே, சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜோதிகா, தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜோதிகா நடிக்கும் என்பதாலும், பெண்களைப் பற்றிய கதை என்பதாலும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார் ஜோதிகா. இது தொடர்பாக சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது :-

பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாட விரும்பும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் உங்கள் முன் இன்று பெருமையுடன் நின்று கொண்டிருக்கக் காரணம் ரசிகர் பெருமக்களாகிய நீங்கள்தான்.

உங்களில் ஒவ்வொருவரும் இந்த படத்தை ரசித்திருக்கிறீர்கள். பெண்களை வெற்றியை நீங்கள் போற்றுகிறீர்கள். அதனால்தான், இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது.

சமுதாயத்தில் இனி பல வசந்திகள் தங்கள் லட்சியங்களை வெல்ல முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். இல்லத்தரசியாக அன்றாடம் பல பணிகளை ஆற்றி வரும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்கிறார்கள்.

அப்படிபட்ட பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என எனக்குள் ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையே இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment