கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் புலி. படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறது புலி படக்குழு.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய்யின் பிஆர்ஒ பி.டி.செல்வகுமாரும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
விஜய்யின் இதுவரை நடித்துள்ள படங்களில் புலி படத்தின் பட்ஜெட் தான் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. புலி படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி மிகப் பெரிய விலைக்கு வாங்கி விட்டது. இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘புலி’ படக்குழுவில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு விஜய் எவ்வளவு பிடிக்கும் என்பதையும் அவர்களது படப்பிடிப்பு அனுபவங்களை ஒரு வீடியோவாக உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். சோனி மியூசிக் நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

0 comments:
Post a Comment