Sunday, May 17, 2015




சூர்யா நடிப்பில் ஹரி இயக்கவுள்ள சிங்கம் 3' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஹன்சிகாவும் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
ஆனால் இந்த செய்தியை ஹன்சிகா மறுத்துள்ளார். இன்று தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, 'சிங்கம் 3' படத்தில் நடிக்க என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அந்த படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை'
 என்று கூறியுள்ளார். இருப்பினும் சிங்கம் 2' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவுக்கு சிங்கம் 3' படத்திலும் ஒரு கேரக்டரை ஹரி ஹன்சிகாவுக்கு ஒதுக்கி வைத்துள்ளதாகவே செய்திகள் தொடர்ந்து கசிந்து வருகின்றது.
 
ஹன்சிகா தற்போது 'புலி' படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் வெளிவர இருக்கும் ரோமியோ ஜூலியட்', வாலு ஆகிய படங்களின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார். மேலும் அவர் இன்னும் சில நாட்களில் சுந்தர் சி இயக்கவுள்ள அரண்மனை 2 படத்தில் பிசியாகிவிடுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள இதயம் முரளி' படத்தில் நடிக்கவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment