Sunday, May 17, 2015


பிரபல குணச்சித்திர நடிகையும், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களின் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் 'அம்மிணி' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஒரு முக்கிய கேரக்டரை மையமாக வைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஏற்கனவே ஒரு பிரபலமான ஒரு ஷோவை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இன்னொரு புதிய ஷோவையும் ஆரம்பிக்க உள்ளாராம். மிக விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த ஷோவின் டைட்டில் 'என்னம்ம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா..

லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ஷோவில் பயன்படுத்திய இந்த டைட்டில் பல சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஏன் சினிமாக்களிலும் கூட பிரபலம் ஆனது. நான் பேசிய வசனம் ஒன்றை மற்றவர்கள் பயன்படுத்தும்போது நானே ஏன் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த டைட்டிலை தேர்வு செய்ததாக கூறும் லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த ஷோ, முழுக்க முழுக்க இளைஞர்கள் பங்குபெறும் ஒரு ஜாலியான ஷோ என்று கூறியுள்ளார். விரைவில் இந்த ஷோ ஆரம்பமாகும் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment