இளையதளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து மற்றும் கம்போடியோ நாடுகளில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனும் தன்னுடை சமூக வலைத்தளத்தில் இதை உறுதி செய்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற 'புலி' கோவில் முன் மங்களகரமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புலி கோவிலின் புகைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.
இனி அடுத்தகட்டமாக படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரிலீஸாகவுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, வித்யூலேகா ராமன், மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீடு ஆகியவற்றின் தேதிகள் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

0 comments:
Post a Comment