Sunday, May 17, 2015


பூஜை, ஆம்பள என தொடர் வெற்றி படங்களை கொடுத்த விஷால், தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் 'பாயும் புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17 என அறிவிக்கப்பட்டுவிட்டதால் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது. வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்

இந்நிலையில் 'பாயும் புலி' படத்தை முடித்தவுடன் விஷால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்திலும், தேசிய விருது பெற்ற 'பசங்க' பாண்டிராஜின் இயக்கத்திலும் அவர் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களிலும் விஷால் நடிக்கவுள்ள கெட்டப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஷாலுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகையின் தேர்வு குறித்து இயக்குனர் பாண்டிராஜ் விஷாலுடன் ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. விஷால் இதுவரை தன்னுடன் நடிக்காத ஹிரோயினுடன் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும், அனேகமான சமந்தா அல்லது நித்யாமேனன் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த பேனரான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.

0 comments:

Post a Comment