Sunday, May 17, 2015


வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது விஷால் நடிப்பில் இயக்கி வரும் திரைப்படம் 'பாயும் புலி.
 
சிவகெங்கை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படும் இந்த படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி எடிட்டிங் செய்து தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதியை இயக்குனர் சுசீந்திரன் தனது திரையுலக நெருங்கிய நண்பர்களான இயக்குனர்கள் பாண்டிராஜ் மற்றும் திரு ஆகியோர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார்
 
பாண்டிராஜ் மற்றும் திரு ஆகிய இருவருமே படத்தில் இந்த பகுதியை பார்த்துவிட்டு தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் சுசீந்திரனை புகழ்ந்து விமர்சனம் செய்துள்ளனர். மிகவும் வித்தியாசமாக இருந்த பாயும் புலி படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், சுசீந்திரனின் வெற்றிப்படங்களின் வரிசையில் இந்த படமும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
 
சுசீந்திரனின் பாயும்புலி கண்டிப்பாக வெற்றிபெறும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று திரு தனது சமூக வலைத்தள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
 
இருவரின் கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளதால் பாயும் புலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment