Tuesday, May 19, 2015

அஜித் 56வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். லட்சுமி மேனன் தங்கை வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

வீரம் சிவா தங்கை வேடத்தில் நடிக்க வைப்பதற்காக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஏமாற்றம் அடைந்தார். அதன்பிறகு ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி மேனன் அஜித்துடன் தங்கை வேடத்தில் நடிக்க தயார் என்று கூறினார். இதையறிந்து உடனே லட்சுமி மேனனை தொடர்பு கொண்டு கதை கூறினார். லட்சுமியும் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து கொண்டேயிருந்தாராம். இயக்குனர் தொடர்ந்து தொந்தரவு பண்ணி கொண்டேயிருந்ததால் தான் கால்ஷீட் கொடுத்தாராம்.
முதலில் சண்டை காட்சிகளுடன் தான் படப்பிடிப்பை துவங்குவதாக இருந்ததாம். ஆனால் லட்சுமி மேனன் திடீரென மனம் மாறிவிட்டால் மீண்டும் எந்த நாயகியை போய் தேடுவது என்று, உடனடியாக லட்சுமி மேனன் நடிக்கும் காட்சியை படமாக்க முடிவு செய்து, அஜித், லட்சுமிமேனன் காட்சியை அவசரமாக படமாக்கிய சிவா கையோடு அந்த ஸ்டில்லை இணையத்திலும் வெளியிட்டு விட்டாராம்.

0 comments:

Post a Comment