புலி படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றிருந்த விஜய் படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில்தான் சென்னை திரும்பியிருக்கிறார்.
புலி படத்தையடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தன்னுடைய 59வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு ஒரு சின்ன டூர் சென்று வர திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில் அட்லீ படத்தையடுத்து விஜய் யார் படத்தில் நடிப்பார் என்பது பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், போக்கிரி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த பிரபு தேவாதான் விஜய்யின் 60வது படத்தை இயக்கப் போகிறார் என தகவல் பரவி வருகிறது. பிரபு தேவா தான் பங்குபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய்யுடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கூறி வருகிறார்.
சமீபத்தில் விஜய்யை சந்தித்து அதிரடியான ஆக்ஷன் கதை ஒன்றை கூறியிருக்கிறார் பிரபு தேவா. இந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக சில மணி நேரம் இந்த கதை குறித்த விவாதத்தில் ஈடுப்பட்டாத கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க பிரபு தேவா இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே முடிந்து விட்டதாம். விரைவில் இதுகுறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment