
மாஸ் படப்பிடிப்பை முடித்த கையோடு தற்போது விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தில் பிஸியாகி விட்டார்
சூர்யா. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.
இந்த 24 படத்தையடுத்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. ஸ்கிரிப்டையும் ஹரி தயார் செய்துவிட்டார். முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டும் நாயகியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் ஹன்சிகாவின் போஷன் இருந்ததால் அனுஷ்காவின் போஷன் கம்மியாக இருந்தது.
தற்போது தயாராகவிருக்கும் 3ம் பாகத்திலும் ஹன்சிகா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து படதரப்பில் விசாரித்த போது, சிங்கம் 3 படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். ஆனால் ஹன்சிகா கதாபாத்திரம் 2ம்பாகத்தில் வந்தாலும் கதைப்படி அவர் கொல்லப்பட்டு விடுகிறார். எனவே 3ம் பாகத்தில் ஹன்சிகா கதாபாத்திரம் இருக்காது என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ஹன்சிகா தனது இணைய தள பக்கத்தில், ‘சிங்கம் 3ம் பாகத்தில் நடிக்க கேட்டு் என்னை யாரும் அணுகவில்லை. நான் நடிப்பதாக சொல்வது வெறும் வதந்திதான்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment