Tuesday, May 19, 2015

சிம்பு நடித்த வாலு படம் பல்வேறு வெளியீட்டுத் தேதிகளைப் பார்த்துவிட்டது. ஆனாலும் வெளியான பாட்டைக்காணோம். ஒவ்வொருமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கும்போதும் புதுப்புது சிக்கல்கள் வந்துகொண்டிருந்தன. இதனால் இப்போது டி.ராஜேந்தர் பொறுப்பெடுத்துக்கொண்டு படத்தை வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஜூன் 12 ஆம் தேதி கண்டிப்பாகப் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அதிலும் தர்மசங்கடம் நேரிட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதே ஜூன் 12 ஆம் தேதி சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இனிமேஇப்படித்தான் படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநாளில் இந்தப்படத்தையும் வெளியிட்டால் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது மட்டுமின்றி இரண்டு படங்களுக்கும் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதனால் இரண்டில் ஏதாவதொரு படத்தை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் என்கிற நிலை. அண்மையில் இனிமேஇப்படித்தான் பட பாடல் வெளியீட்டுவிழாவில்தான், மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன் அவர் இந்த அளவுக்கு வளர அவருடைய திறமைதான் காரணம் எனறு பேசினார் சிம்பு. அந்தஅளவு சந்தானம் மீது அன்புடன் இருக்கின்றவர்.

இதனாலேயே இரண்டுபடங்களும் ஒரேநாளில் வரவேண்டாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்களாம். வாலு எற்கெனவே தாமதம் மேலும் ஒருவாரம் தாமதமாவதில் ஒன்றுமாகிவிடாது என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். அதனால் வாலு படம் ஒரு வாரம் தள்ளி ஜூன் 19 அன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இரண்டுபடங்களும் ஜூன்12 வெளியீடு என்றுதான் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 

0 comments:

Post a Comment