Tuesday, May 19, 2015


 கோலிவுட்டின் ஹாட் நியூஸ் இப்பொதைக்கு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் தான். லிங்கா படத்தையடுத்து ரஜினியை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு ‘அட்டகத்தி’ , ‘மெட்ராஸ்’, படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் என்றவுடனேயே மீடியா, கோலிவுட் வாட்டாரங்கள் என பரபரப்பானது. 
இந்நிலையில் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு இசையும் சந்தோஷ் நாராயணன் தானா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. மேலும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களும் ரகசியமாக உள்ளன. இந்நிலையில் படத்தின் கதை குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. 
’பில்லா’, பாட்ஷா’ போன்று கேங்ஸ்டர் படம் என்றும் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா’ பட ரீமேக்கான 2007ம் அண்டு வெளியான ‘பில்லா’ படத்தில் அஜித் மலேசியாவில் கேங்ஸ்டர் , கடத்தல் மன்னன் கெட்டபில் நடித்தார். 
தற்போது மலேசியா பின்னணியில் கேங்ஸ்டராக ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.இதற்கான லோகேஷன் செலக்‌ஷனில் ரஞ்சித் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லை. 

0 comments:

Post a Comment