Tuesday, May 19, 2015


சமீபத்தில் 'பிசாசு' என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மிஷ்கின் வரும் ஜூன் முதல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  மிஷ்கினின் முந்தைய படங்களான அஞ்சாதே மற்றும் யுத்தம் செய் படங்களை போல, இது ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் படம் என்றும், இந்த படத்தின் ஹீரோவாக சரத்குமார் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முதன்முதலாக மிஷ்கின் படத்தில் சரத்குமார் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் மிஷ்கின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மிஷ்கினும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அனேகமாக அது ஒரு நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் வழக்கம்போல மிஷ்கின் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை இருட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். படப்பிடிப்பை பாண்டிச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இம்மாத இறுதியில் படத்தின் தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை மிஷ்கின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment