Tuesday, May 19, 2015


ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான ஐஸ்வர்யா இந்த படத்தின் தோல்வி காரணமாக வேறு படங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தந்தை அர்ஜூன் மகளுக்காக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. அர்ஜூன் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்கவிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கதக் டான்சர் வேடம் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் தினசரி கதக் டான்ஸ் வகுப்பிற்கு சென்று வருவதாகவும், விரைவில் படத்தின் கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இந்த படத்தை ஹீரோயினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக அர்ஜுன் தேர்வு செய்திருப்பதாகவும், மிகவிரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள ஹீரோ மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக அர்ஜூன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment