Wednesday, May 13, 2015


தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஞ்சன்னா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தற்போது இந்தியாவின் மிக உயரிய விருதான 'அசோக் சக்ரா' விருது பெற்ற வீரப்பெண்மணி நீர்ஜா பானட்' அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். 

நீர்ஜா பெனாட், கடந்த 1986ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்ற தன்னுடைய உயிரையே இழந்த வீரப்பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான 'அசோக் சக்ரா' விருது வழங்கி கெளரவித்தது. இந்திய அஞ்சல் துறை கடந்த 2005ஆம் ஆண்டு இவரது படத்துடன் கூடிய அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அதுல் காஸ்பேகர் மற்றும் சாந்தி சிவராம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் தேசிய விருது பெற்ற வித்யாபாலனின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது யாரும் எதிர்பாராத வகையில் வித்யாபாலன் திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு தளத்திற்கு வந்து சோனம் கபூர், மற்றும் படத்தின் இயக்குனர் ராம் மாதாவனி ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை கூறியதோடு, படத்திற்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்களையும் கொடுத்துவிட்டு சென்றாராம். ஒரு மிகப்பெரிய நடிகை தங்கள் படப்பிடிப்பை பார்க்க வந்தது குறித்து படக்குழுவினர் பெருமையாக பேசி வருகின்றனர்.

0 comments:

Post a Comment