கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது மாயா, தனி ஒருவன், இது நம்ம ஆளு, நானும் ரவுடிதான், காஷ்மோரா, திருநாள் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி நடிக்கும் 150வது படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி எட்டு வருடங்களுக்கு பின்னர் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றை பூரி ஜெகன்னாத் இயக்கவுள்ளதாக வந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் காமெடி கலந்த முழுநீள எண்டர்டெயிண்மெண்ட் படம் என்றும், இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் கூறியுள்ளார்.
இதுவரை சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்காத நயன்தாராவிடம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்னொரு கேரக்டரில் நடிக்க அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா, அஞ்சலி இருவருமே தெலுங்கு மார்க்கெட்டில் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நயன்தாரா, விரைவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜோடி சேரவுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment