கத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு சமந்தாவை தேடி வருகிறது. விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, தனுஷின் விஜபி-2, சூர்யாவின் 24, விஜய்யின் 59வது படம் என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா தனுஷ் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, நான் நிச்சயமாக சொல்வேன், என்னுடைய முந்தைய படங்களைவிட இந்த படத்தில் என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்காக தனுஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் எமி ஜாக்சனும் நடிக்கிறார். அனிருத் இசையமைகிறார். கே.எஸ்.ரவிக்குமார் தனுஷிற்கு அப்பாவாகவும், ராதிகா அம்மாவாகவும் நடிக்கிறார். தனுஷ் நடித்துள்ள மாரி படம் ஜுலை மாதம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

0 comments:
Post a Comment