கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது கால்ஷீட் பிசி காரணமாக அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.
சமந்தாவும் தொடர்ச்சியாக ’விஐபி 2’, ‘24’,’விஜய் 59’ என பிசியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தற்போது மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து கௌதம் மேனன் இவரைத் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதும் பெற்றவர். இந்நிலையில் தெலுங்கில் உருவாக உள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஹீரோ நாக சைதன்யா என்பது உறுதியான நிலையில் இரு மொழி படங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க இருக்கும் கௌதம் மேனன் தெலுங்கிலும் மஞ்சிமாவையே நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment