மாஸ் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தில் இன்னொரு நாயகியாக பிரணிதாவும் இருக்கிறார். இருந்தாலும் படத்தில் இவருக்குத்தான் முக்கியத்துவம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் இப்படம் தொடர்பாக அவர் அதிருப்தியுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம், படத்தின் திரைக்கதையில் காதலுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் நிறையக் காதல் காட்சிகள் இல்லை என்பதும்தானாம். இந்தத் தகவலைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இயக்குநர் வெங்கட்பிரபுவே சொன்னார். இது பேய்ப்படம் என்பதால், நயன்தாரா பேயாக நடிக்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெங்கட்பிரபு, ஏற்கெனவே காதல்காட்சிகள் நிறைய இல்லை என்பதால் அவர் கொலைவெறியில் இருக்கிறார். இந்தநிலையில் அவர்தான் பேய் என்று சொல்லிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஏனெனில் படம் பற்றி தவறான செய்திகள் நிறைய வந்துகொண்டிருக்கிறதாம்.
படத்தில் ஐட்டம்சாங் என்று சொல்லப்படும் குத்துப்பாட்டே கிடையாதாம். ஆனாலும், தமன்னா மாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறதாம். படத்தில் அப்படி எந்தப்பாடலும் இல்லை என்று சொல்கிறார் வெங்கட்பிரபு. அதேபோல இந்தப்படத்துக்காக இசையமைப்பாளர் தமனை வைத்து ஒரு பாடல் உருவாக்கினார்களாம். அந்தப்பாடலைப் படத்தில் பயன்படுத்தவில்லை என்றும் அந்தப்பாடலை தாம் வேறொரு படத்தில் பயன்படுத்திக்கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொல்லியிருக்கிறார் என்றும் வெங்கட்பிரபு தெரிவித்தார்.

0 comments:
Post a Comment