இந்தப்படத்தில் ரஜினியுடன் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்களாம். அவர்களையெல்லாம் கூப்பிட்டுச் சம்பளம் பேசி முன்தொகையையும் கொடுத்துவிட்டார்களாம். கூடவே எப்போது படப்பிடிப்பு என்பதை திடீரெனச் சொல்வோம் அதற்குத் தகுந்தாற்போல் தயாராக இருங்கள், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பு இருந்தால் அதுபற்றிய விவரங்களையும் சொல்லிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அதைவிட முக்கியமாக இந்தப்படம் பற்றிய தகவல்களை யாரிடமும் சொல்லாதீர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்களாம்.

முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில்தான் தொடங்கவிருக்கிறதாம். ஒருமாதம்வரை அங்கு படப்பிடிப்பு நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தைத் தயாரிப்பது கலைப்புலிதாணு என்று சொல்லப்பட்டாலும், இந்தப்படத்தின் உண்மையாகத் தயாரிப்பது ஈராஸ் நிறுவனம்தான் என்றும் தாணு முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துத் தருகிறார் என்றும் ஒரு செய்தி சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. படத்தில் சம்பந்தப்பட்டவர்களோ தாணுசார்தான் தயாரிக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment