Wednesday, May 6, 2015

உச்சக்கட்ட சோதனையில் முருகதாஸ்? - Cineulagam
துப்பாக்கி, ஹாலிடே, கத்தி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் முருகதாஸ். ஆனால் சமீப காலமாக இவருக்கு மிகவும் கஷ்டக்காலம் போல.
இவருடைய தயாரிப்பில் விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படம் ஆரம்பத்தில் நல்ல முறையில் படப்பிடிப்பு நடந்தாலும், தற்போது எதிர்ப்பார்த்ததை விட படம் அதிக பட்ஜெட்டிற்கு சென்றுள்ளதாம்.
இது மட்டுமின்றி கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன் படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார். இப்படக்குழுவினர்கள் சமீபத்தில் தான் பர்மாவில் பெரிய பிரச்சனையில் சிக்கி வெளிவந்துள்ளனர், இப்படி படம் ஆரம்பிக்கும் போதெல்லாம் நல்ல முறையில் ஆரம்பித்து, தற்போது பணக்கஷ்டம் காரணமாக பாதியில் நிற்பது முருகதாஸை மிகுந்த மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment