தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் அனேகன். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் மாபெரும் வெற்றி என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால், படம் வந்து 100 நாட்கள் கூட ஆகாத நிலையில் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிப்பரப்பப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் தான் தனுஷின் மனைவி இயக்கிய வை ராஜா வை படத்தின் தயாரிப்பாளரும் கூட.
இப்படம் மாபெரும் வெற்றி, இந்த வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி என ஐஸ்வர்யா தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினாலும், வை ராஜா வை கிட்டத்தட்ட பட்ஜெட்டில் பாதியளவு நஷ்டத்தை தந்துள்ளதாக சினிமா வட்டாரத்தால் கிசுகிசுக்கப்படுகிறது.
இதேபோல் தான் அனேகன் ஹிட் என்று தனுஷ் கூறினாலும், படம் தோல்வி தான் என சில முன்னணி பத்திரிக்கைகளிலேயே தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment