Wednesday, May 6, 2015


சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 2' தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு பெரும் புகழையும் பணத்தையும் தேடி கொடுத்தது என்பதை அனைவரும் அறிவொம். இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி கடந்த வாரம்  தெலுங்கிலும் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இந்த படத்திற்கு முன்னர் இயக்கிய முனி, காஞ்சனா ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் ஆன படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ரிலீஸான 'காஞ்சனா' திரைப்படத்தை, ராகவா லாரன்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. பெரும்பாலான முன்னணி நடிகர்கள் சரத்குமார் நடித்த திருமங்கை வேடத்தில் சேலை கட்டி நடிப்பதை விரும்பவில்லை. அதுமட்டுமின்றி கிளைமாக்ஸ் பாடலையும் படத்தில் இருந்து தூக்க வலியுறுத்தியுள்ளனர்.

தன்னுடைய படத்தில் எவ்வித காம்ப்ரமைஸும் செய்துகொள்ள விரும்பாத ராகவா லாரன்ஸ், இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவேதான் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாக சமீபத்தில் தொலைக்காட்சியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஒரு பெரிய ஸ்டாராக இருந்த சரத்குமார், இமேஜ் குறித்து கவலைப்படாமல் திருநங்கை வேடத்தில் தைரியமாக நடித்தது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

பெரிய நடிகர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தன்னுடைய படத்தில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் இருந்த லாரன்ஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

0 comments:

Post a Comment