இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகழக்கூடிய ஒருவரில் தலை சிறந்தவர் இயக்குனர் “மணிரத்னம்”. இவர் இதுவரையில் பலதரப்பட்ட கதைகளை தனது இயக்கத்தின் மூலம் படமாக வெளியிட்டவர். இவரது படத்திற்கென பல ரசிகர்கள் உள்ளனர். இயக்குனர் “மணிரத்னம்” இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் “ஓ காதல் கண்மணி”. இப்படம் ஒரு மாறுபட்ட கதைக்களத்தினைக் கொண்டு வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் “மணிரத்னம்” அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் டெல்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்போல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரையில் தெரியவில்லை.

ஒருவேளை இவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு இவருக்கு மார்டைப்பு ஏற்பட்டுள்ளது. இல்லை ஏதாவது விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. இதனைப் பற்றி மருத்துவர்கள் மற்றும் அவர் வீட்டினர் யாரும் எதுவும் கூறவில்லை.
0 comments:
Post a Comment