நேற்றைய தினம் கோடம்பாக்கத்தில் அதிக பரவலான பேச்சு ரஜினி - ரஞ்சித் படத்தை பற்றி தான். எப்படி ஒரு இளம் இயக்குனருக்கு சூப்பர்ஸ்டார் வாய்ப்பு கொடுத்தார் என்று பலரும் குழப்பம் அடைய என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
இதற்கு காரணமே அவரது மகள் சௌந்தர்யா தான் என்று தெரிய வந்தது. ஒருமுறை ரஞ்சித்தை சௌந்தர்யா சந்தித்துள்ளார், ரஜினி பற்றி ரஞ்சித் விசாரிக்க, அப்பா பல கதைகளை கேட்டு வருகிறார் என்ற சொல்ல அவரும் என்னிடம் தலைவருக்கு ஒரு கதை இருக்கிறது என்று சொல்லியுள்ளார்.
சௌந்தர்யாவுக்கு கதை கேட்டதும் பிடித்து போக அப்பாவிடம் ரஞ்சித்தை அழைத்து சென்று கதை கேட்க வைத்தாராம். முழுகதையும் கேட்ட ரஜினிக்கும் பிடித்து போனதாம்.
ஆனால் ரஜினிக்கு சமீபத்தில் சுந்தர்.சி சொன்ன கதையும் மிகவும் பிடித்துப்போனது . ரஞ்சித் படம் பற்றி வெளியே அதிகமாக கசிந்ததால் என்ன செய்வது என்று யோசித்து வருகிறாராம். அதனால் தான் அவரது தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை.
இந்த நேரத்தில் தான் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கடன் பிரச்சனையால் வங்கி சொத்து அபகரிப்பில் ஈடுபட போகிறது என்ற செய்தி ரஜினி காதுக்கு விழுந்தது .
கடந்த 20 வருடமாக ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று ரஜினியிடம் பேசி வந்தாராம் ரவிச்சந்திரன், ஆனால் அவர் பிடிகொடுக்கவே இல்லை. தற்போது தான் சரியான சந்தர்ப்பம் என்று ரவிச்சந்திரனுக்கு கை கொடுக்க முன் வருகிறார் ரஜினி .
சுந்தர் சி சொன்ன கதையை தயாரிக்க போவது ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்ற செய்தி தற்போது ரஜினி தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருகிறது . ரஞ்சித் படம் பொங்கலுக்கு, சுந்தர்.சி படம் தீபாவளிக்கு என்ற இப்போதே கணக்கு போட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment