Friday, May 15, 2015


அஞ்சலி நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் மாப்ள சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது இவருக்கு குழந்தை இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அஞ்சலி கூறியதாவது:

நான் காணாமல் போய்விட்டதாக கடந்த வருடம் என்னைப் பற்றி பரபரப்பாக தகவல்கள் வந்தன. தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத போது தெலுங்கில் நடித்து வந்தேன். இது திரையுலகில் இருப்பவர்களுக்கு தெரியும். சினிமாவிலிருந்து நான் விலகி விடவில்லை.

பழைய சம்பவங்களை பற்றி பேச எனக்கு ஆர்வம் இல்லை. நான் கஷ்டமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது எல்லோருக்குமே தெரியும். அந்த கஷ்டங்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. எனக்கு குழந்தை இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வருகிறது.

ஒரு நிகழ்ச்சியின் போது எனது உறவுக்காரர் ஒருவரின் குழந்தையுடன் போட்டோவுக்கு போஸ் தந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அது என் குழந்தை என்று பரப்பிவிட்டார்கள். எப்படியெல்லாம் கற்பனையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, நான் தனி ஆளாகவே இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment