இன்று என்ன தான் சிவகார்த்திகேயன் திரையில் கதாநாயகனாக தோன்றினாலும் அவருக்கென ஒரு தனி இடத்தை பெற்று தந்தது அவரது நகைச்சுவை மேடை பேச்சு தான். இவரின் பேச்சு ஒரு ரசிகனின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
அந்த நபர் சிவகார்த்திகேயனுக்காக எழுதிய கடிதத்தில் ‘இரண்டு வருடத்திற்கு முன்பு வாழ்க்கையை வெறுத்து மரணத்தை தேடிச் சென்றேன். அந்த நேரத்தில் தான் உங்களது வீடியோவை பார்க்க நேரிட்டது. இன்று நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் உங்களது நகைச்சுவை பேச்சு தான் காரணம்.
இவ்வாறு என்னை வாழ வைத்த உங்களுக்கும் உங்களை பெற்ற பெற்றோருக்கும் நன்றி, இன்று முதல் நான் உங்களது ரசிகன்’ என எழுதியுள்ளார்.

0 comments:
Post a Comment